பொய் சொல்கிறார் பொன்ராதா: டி.ஆர்.பாலு பதில்

Must read

சென்னை,

தேசிய  நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருகிறது.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள  நிலையில், இந்த பிரச்சினைக்கு திமுகவே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மைல்கற்களில் இந்தி எழுத்து மீது தார்பூசி அழிப்பவர்கள் தங்கள் முகத்திலேயே பூசிக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில் பொன்ராவின் செயலுக்கு, திமுகவை சேர்ந்த  முன்னாள் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன் பொய் சொல்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி உள்ளார்.

அதில், நெடுஞ்சாலை மைல் கற்களில் மாநில மொழிக்கு முன்னுரிமை என்றே அரசாணை உள்ளதாக  தெரிவித்து உள்ளார்.

மேலும் 2004ல் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் இந்திக்கு முன்னுரிமை தரப்பட்டதாக பாஜக தவறாக தகவல் அளித்தாக டி.ஆர். பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மாநிலமொழி, ஆங்கிலம் அதற்கு பிறகே இந்தி இருக்க வேண்டும் என குறிப்பாணையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

More articles

Latest article