தமிழக மைல் கற்களில் இந்தி ஏன்?:  மத்திய அமைச்சர் பொன்.ரா விளக்கம்

“வட இந்திய ஓட்டுநர்களுக்கு  உதவவே, தமிழகத்தில் நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியில் எழுதப்படுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலை மைல் கற்களில்ல ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனினடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. அதனால்தான் இந்தியில் எழுதப்படுகிறது” என்று விளக்கம் அளித்ததோடு, “நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுத வேண்டும் என்ற முடிவு  காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது தி.மு.கவின் டி.ஆர்.பாலு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நேரத்தில் போது எடுக்கப்பட்டது” என்றார்.

 


English Summary
why hindi word in Milestone? Central Minister Pon Radhakrishnan description