வைத்தியநாத சுவாமி கோவில், இவநல்லூர், மயிலாடுதுறை

வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள இவநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலவர் வைத்தியநாத சுவாமி என்றும், தாயார் தையல் நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி பஞ்ச வைத்தியநாதர் கோயில்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாத சுவாமி கோயில்கள் உள்ளன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று.

புராணக்கதைகள்

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் இந்த கிராமத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. அதனால், இவ்வூர் ஐவர் நல்லூர் என்று அழைக்கப்பட்டு, இவநல்லூராக மாறியது.

கோவில்

கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையின் சில இடிபாடுகளைத் தவிரக் கோயில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகள் மற்றும் சிலைகள் கூரையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தான தெய்வம் வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார் மற்றும் கிழக்கு நோக்கி இருக்கிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். அன்னை தையல் நாயகி என்று அழைக்கப்படுகிறார் மற்றும் தெற்கு நோக்கி இருக்கிறார். விநாயக மற்றும் நாகர் சிலைகள் மூலஸ்தான தெய்வம் மற்றும் அன்னை தையல் நாயகியைத் தவிர ஓலை கூரையின் கீழ் காணப்படுகின்றன. அருகிலுள்ள குளத்தின் கரையிலும் சில சேதமடைந்த சிலைகள் காணப்படுகின்றன. குளத்தின் கரையில் ஒரு பெரிய மகிழ மரம் உள்ளது.

செல்லும் வழி

கொருக்கையிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும், கொண்டலில் இருந்து 5 கிமீ தொலைவிலும், மணல்மேட்டில் இருந்து 9 கிமீ தொலைவிலும், நிடூர் இரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.  திருச்சி விமான நிலையத்திலிருந்து 127 கிமீ. பக்தர்கள் மயிலாடுதுறையில் இருந்து வில்லியநல்லூர் வழியாகச் சென்று, கொண்டலில் இடதுபுறம் திரும்பி, மேலும் 5 கிமீ பயணித்து இவநல்லூரை அடைய வேண்டும். கொருக்கைக்கு அடுத்தபடியாக இவநல்லூர் உள்ளது.