ம்மு

ன்று கார்கில் போர் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த  1999 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படை வீரர்கள் எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்தனர்.   சுமார் 200 கிமீ தூரம் நடந்த இந்த ஆக்கிரமிப்பில் பாகிஸ்தான் பல இந்திய நிலைகளைக் கைப்பற்றியது.   இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் படையை விரட்டி அடித்தது.

இந்த போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி அன்று கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது.   இந்த வெற்றி தினத்தை நாட்டின் அனைத்து பகுதி ராணுவ வீரர்களும் கொண்டாடி வருகின்றனர்.   இந்த நாளில் இப்போரில் வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை  தளபதிகளான பிபின் ராவத், தனோவா, கரம்பீர் சிங் ஆகியோர் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.   இந்தியாவைப் பாதுகாத்த வீரர்களின் துணிச்சலுக்குத் தலை வணங்குவோம் என குடியரசுத் தலைவர் செய்தி அறிவித்துள்ளார்.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர்நீத்த வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தி உள்ளார்.