டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதியது.

ரித்தாளா முதல் ஷாஹீத் ஸ்தல் வரை உள்ள ரெட் லைன் வழித்தடத்தில் சென்ற மெட்ரோ ரயிலில் இரவு 8:30 மணி அளவில் கூட்ட நெரிசலில் பயணம் செய்த சிறுமியிடம் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு சுயஇன்பத்திலும் ஈடுபட்டுள்ளான்.

சீலாம்பூர் ரயில்நிலையத்தில் இறங்க முற்பட்டபோது அந்த சிறுமி மீது விந்தணுக்கள் பீய்ச்சி இருப்பதைக் கண்ட அவரது தாய் கூச்சலிட்டுள்ளார்.

அதேவேளையில், அந்த நபரின் செய்கையை கவனித்த சகபயணிகள் சிலர் அவரை கையும் களவுமாக பிடித்து ஷஹதாரா மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து அவனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது.

டெல்லி மெட்ரோ ரயிலில் கடந்த சில மாதங்களாக சுயஇன்பத்தில் ஈடுபடுவது பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை அடுத்து மெட்ரோ ரயில் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஓடும் ரயிலில் சிறுமியிடம் சுயஇன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.