மும்பை:
காராஷ்டிரா அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் போனில் பேசும்போது ‘ஹலோ’ என்பதற்குப் பதிலாக இனி ‘வந்தே மாதரம்’ என்று சொல்வார்கள் என்று மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சுதிர் முங்கண்டிவார், “ஹலோ ஒரு ஆங்கில வார்த்தை. வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இந்தியனின் உணர்வு. நாம் சுதந்திரத்தின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எனவே அலுவலர்கள் வணக்கம் என்பதற்கு பதிலாக தொலைபேசியில் ‘வந்தே மாதரம்’ என்று சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்,..