ரஷ்யா-வுக்கு உயரே பறந்த இந்திய தேசிய கொடி… வீடியோ…

Must read

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

அரசு கட்டிடங்கள், புராதன சின்னங்கள், தொல்லியல் துறையின் கீழ் உள்ள இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ-வுக்கு மேல் பறந்து சென்ற விமானத்தில் இருந்து பாராச்சூட் மூலம் குதித்து மூவர்ண கொடி பறக்க விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாஸ்கோ-வில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் சுதந்திர தின கொடியேற்ற பிரதமர் மோடி கலந்து கொண்டு கொடியேற்றுகிறார், இதேபோல் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்.

 

More articles

Latest article