சென்னை: மகாகவி பாரதியார் 100வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரதுஉருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து,மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  பாரதியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பாரதியார் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் உடனிருந்தனர்.

“செப்டம்பர் 11 ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தான 14 அறிவிப்புகள்!