துரை

ற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகலை விற்கத் தடையில்லை என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சில யோசனைகளுடன், “நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை” என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில்

”சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் ஆற்றில் கரைக்க கூடாது. அத்தகைய சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கிவிட்டு சிலைகளை விற்கலாம். வீடுகளில் வழிபடுவதற்கு, விநாயகர் சிலைகளை வாங்குவோரின் விவரங்களை பெற்றுக்கொண்டு, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவர்களை கண்காணிக்க வேண்டும்:

என்று.தெரிவிக்கப்பட்டுள்ளது.