‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் விஷால் நடித்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது.

இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்த நீதிமன்றம் நடிகர் விஷால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரான விஷாலிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார்.