சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ரஜினியை வரவேற்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர் நடித்த சிவாஜி படத்தில் மொட்டை தலையில் விரலை வைத்து செய்யும் மேனரிஸத்தை செய்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதில் “சர்வதேச அளவில் பரிட்சயமான இந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அவர் எனக்கு அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் அவரது படங்களில் நான் சேர்க்க முயற்சிக்கும் சமூக விஷயங்கள் தொடர்பாக விவாதித்தேன்.

ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் வெள்ளை டி-சர்ட், வெள்ளை வேட்டியுடன் சாதாரணமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.