மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து விதிகளுக்கு புறம்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுஇடங்களில் ஒலிபெருக்கி வைக்க தடை விதித்து தனது முதல் உத்தரவில் கையெழுத்திட்டார்.

மேலும், திறந்தவெளியில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தென் மாநிலங்களில் துடைத்தெறியப்பட்ட பாஜக மூன்று வடமாநிலங்களில் அசுர வெற்றி பெற்றதை அடுத்து ஒரு வார கால இழுபறிக்குப் பின் ம.பி. முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இதுவரை முதல்வராக இருந்துவந்த பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வராக வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சிவராஜ் சிங் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த மோகன் யாதவை முதல்வராக பாஜக கட்சி தலைமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.