டீசல் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் 20% அதிகரிப்பு : பொருட்கள் விலை உயரலாம்

Must read

சென்னை

டிசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சரக்கு லாரிகள் வாடகைக் கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளன.

நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.  இவற்றுடன் மத்திய அரசு சமீபத்தில் கலால் வரியையும் மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியையும் அதிகரித்துள்ளன.   குறிப்பாக கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த வரி உயர்வு ஏற்பட்டுள்ளது.  

தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து புது உச்சத்தைத் தொட்டு வருகின்றன.  தமிழகத்தில் தற்போது டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியதால் வானக ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.   இந்த உயர்வால் சரக்கு லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை,  காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் கட்டணத்தை 20% அதிகரித்துள்ளனர்.

இந்த கட்டண உயர்வு குறித்து வியாபாரிகள் தரப்பில், 

”தமிழகத்துக்குப் பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இதர மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. எனவே சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டண உயர்வால், பொருட்களின் விலை சுமார் 10 சதவீதம் வரை உயரும். மற்ற வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டுசெல்லும் கனரக வாகனங்களின் வாடகையும் உயர்வதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article