புவனேஸ்வர்: புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழாவுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், விழா களையிழந்தது காணப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழாஆண்டு தோறும் ஜூலை மாதங்களில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்துகொள்ள மாநில அரசு தடை விதித்துள்ளதால், ரத யாத்திரை களையிழந்து காணப்படுகிறது.

முன்னதாக இன்று காலை முதல் ஒடிசா பூரி ஜெகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இன்று பிற்பகல் ரத யாத்திரை தொடங்க உள்ளது.  இதற்காக,  ரதம் இழுப்போர், நிர்வாகிகள் என ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்து உள்ளனர். ஒவ்வொரு தேரையும் 5 நபர்களை கொண்டே இழுக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ரத யாத்திரையின்போது அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேர்களில்  பூரி ஜெகநாதர், சகோதரர் பாலா பத்திரா, சகோதரி தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனியாக பூரி நகர சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார்கள். இதனை காண உலகம் முழுவதிலும் இருந்தது லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் குவித்து வழக்கம்.

ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு இந்த ஆண்டும் அனுமதி வழங்காததால், பூரி நகரம் கலையிழந்து காணப்படுகிறது.