சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 40  மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள  நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு மார்ச் 16ந்தேதி மாலை வெளியானது. அதன்படி, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நாளை ( மார்ச் 27ந்தேதி)யுடன் வேட்புமனத் தாக்கல் முடிவடைகிறது. அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி,  ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு மனுக்களை தாக்கல் செய்யலாம். இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.

தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதுபோல , அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகள் சார்பிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது. இதனால் 4முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், 40 தொகுதிகளிலும் போட்டியிடும்  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள், அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

  1. வட சென்னை: திமுக-கலாநிதி வீராச்சாமி பாஜக-பால் கனகராஜ் அதிமுக-இராயபுரம் மனோ நாம் தமிழர்-அமுதினி
  2. மத்திய சென்னை: திமுக-தயாநிதி மாறன் பாஜக-வினோஜ் செல்வம் தேமுதிக-பார்த்தசாரதி நாம் தமிழர்-கார்த்திகேயன்
  3. தென் சென்னை: திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன் பாஜக-தமிழிசை செளந்தரராஜன் அதிமுக-ஜெயவர்தன் நாம் தமிழர்-தமிழ்செல்வி
  4. திருவள்ளூர்: காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில் பாஜக-பாலகணபதி தேமுதிக-நல்லதம்பி நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
  5. காஞ்சிபுரம்:  திமுக-செல்வம் பாமக-ஜோதி வெங்கடேஷ் அதிமுக-ராஜசேகர் நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
  6. ஸ்ரீபெரும்புதூர்: திமுக-டி.ஆர்.பாலு தமாகா-வேணு கோபால் அதிமுக-பிரேம்குமார் நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
  7. அரக்கோணம்: திமுக-ஜெகத்ரட்சகன் பாமக-கே.பாலு அதிமுக-விஜயன் நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
  8. வேலூர்: திமுக-கதிர் ஆனந்த் புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம் அதிமுக-பசுபதி நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
  9. ஆரணி: திமுக-தரணி வேந்தன் பாமக-கணேஷ்குமார் அதிமுக-கஜேந்திரன் நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
  10. திருவண்ணாமலை : திமுக-அண்ணாத்துரை பாஜக-அஸ்வத்தாமன் அதிமுக-கலியபெருமாள் நாம் தமிழர்-ரமேஷ் பாபு
  11. திருச்சிராப்பள்ளி:  மதிமுக-துரை வைகோ அமமுக-செந்தில்நாதன் அதிமுக-கருப்பையா நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
  12. கரூர்:  காங்கிரஸ்-ஜோதிமணி பாஜக-செந்தில்நாதன் அதிமுக-தங்கவேல் நாம் தமிழர்-கருப்பையா
  13. திண்டுக்கல்:  மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம் பாமக-திலகபாமா எஸ்.டி.பி.ஐ-முபாரக் நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்
  14. மதுரை:  மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன் பாஜக-ராம சீனிவாசன் அதிமுக-சரவணன் நாம் தமிழர்-சத்யா தேவி
  15. இராமநாதபுரம்:  ஐயுஎம்எல்-நவாஸ்கனி ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-ஜெயபெருமாள் நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
  16. தேனி:  திமுக-தங்க தமிழ்செல்வன் அமமுக-TTV.தினகரன் அதிமுக-நாராயணசாமி நாம் தமிழர்-மதன் ஜெயபால்
  17. சிவகங்கை: காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம் இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ் அதிமுக-சேவியர் தாஸ் நாம் தமிழர்-எழிலரசி
  18. தஞ்சாவூர்: திமுக-முரசொலி பாஜக-முருகானந்தம் தேமுதிக-சிவநேசன் நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
  19. நாகப்பட்டினம்:  இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ் பாஜக-ரமேஷ் அதிமுக-சுர்ஜித் சங்கர் நாம் தமிழர்-கார்த்திகா
  20. மயிலாடுதுறை:  காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை பாமக-ஸ்டாலின் அதிமுக-பாபு நாம் தமிழர்-காளியம்மாள்
  21. சிதம்பரம் வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன் பாஜக-கார்த்தியாயினி அதிமுக-சந்திரஹாசன் நாம் தமிழர்-ஜான்சிராணி
  22. கடலூர்:  காங்கிரஸ்-விஷ்னு பிரசாத் பாமக-தங்கர் பச்சான் தேமுதிக-சிவக்கொழுந்து நாம் தமிழர்-மணி வாசகன்
  23. பெரம்பலூர்:  திமுக-அருண் நேரு ஐ.ஜே.கே-பாரிவேந்தர் அதிமுக-சந்திரமோகன் நாம் தமிழர்-தேன்மொழி
  24. கோயம்புத்தூர்:  திமுக-கணபதி ராஜ்குமார் பாஜக-K.அண்ணாமலை அதிமுக-சிங்கை ராமச்சந்திரன் நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
  25. நீலகிரி:  திமுக-ஆ.ராசா பாஜக-எல்.முருகன் அதிமுக-லோகேஷ் நாம் தமிழர்-ஜெயக்குமார்
  26. பொள்ளாச்சி:  திமுக-ஈஸ்வரசாமி பாஜக-வசந்தராஜன் அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன் நாம் தமிழர்-சுரேஷ்குமார்
  27. திருப்பூர்:  இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன் பாஜக-முருகானந்தம் அதிமுக-அருணாச்சலம் நாம் தமிழர்-சீதாலட்சுமி
  28. ஈரோடு:  திமுக-பிரகாஷ் தமாகா-விஜயகுமார் அதிமுக-ஆற்றல் அசோக்குமார் நாம் தமிழர்-கார்மேகன்
  29. நாமக்கல்:  கொமதேக-மாதேஷ்வரன் பாஜக-கே.பி.ராமலிங்கம் அதிமுக-தமிழ்மணி நாம் தமிழர்-கனிமொழி
  30. சேலம் திமுக-செல்வகணபதி பாமக-அண்ணாத்துரை அதிமுக-விக்னேஷ் நாம் தமிழர்-மனோஜ்குமார்
  31. கள்ளக்குறிச்சி:  திமுக-மலையரசன் பாமக-தேவதாஸ் உடையார் அதிமுக-குமரகுரு நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்
  32. விழுப்புரம்:  வி.சிறுத்தைகள்-ரவிக்குமார் பாமக-முரளி சங்கர் அதிமுக-பாக்கியராஜ் நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்
  33. தருமபுரி:  திமுக-ஆ.மணி பாமக-செளமியா அன்புமணி அதிமுக-அசோகன் நாம் தமிழர்-அபிநயா
  34. கிருஷ்ணகிரி:  காங்கிரஸ்-கோபிநாத் பாஜக-நரசிம்மன் அதிமுக-ஜெயப்பிரகாஷ் நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
  35. கன்னியாகுமரி:  காங்கிரஸ்-விஜய் வசந்த் பாஜக-பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக-பசிலியான் நசரேத் நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
  36. திருநெல்வேலி:  காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ் பாஜக-நயினார் நாகேந்திரன் அதிமுக-ஜான்சி ராணி நாம் தமிழர்-பா.சத்யா
  37. தென்காசி:  திமுக-ராணி ஸ்ரீகுமார் தமமுக-ஜான் பாண்டியன் புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி நாம் தமிழர்-இசை மதிவாணன்
  38. தூத்துக்குடி:  திமுக-கனிமொழி தமாகா-SDR.விஜயசீலன் அதிமுக-சிவசாமி வேலுமணி நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
  39. விருதுநகர்:  காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர் பாஜக-ராதிகா சரத்குமார் தேமுதிக-விஜய பிரபாகர் நாம் தமிழர்-கெளசிக்
  40. புதுச்சேரி:  காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை பாஜக-நமச்சிவாயம் அதிமுக-தமிழ்வேந்தன் நாம் தமிழர்-மேனகா.