சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அதிகாலை நடைபயணத்தின்போது தூத்துக்குடி வேட்பாளர்  கனிமொழிக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீனவர் வீட்டில் தேநீர் அருந்தியதுடன் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 25 நாட்களே உள்ள நிலையில் நாளை (மார்ச் 27ஆம்) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.  நேற்று, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர்  தூத்துக்குடி சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இன்று  தூத்துக்குடி அருகே சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொது கூட்டம் நடக்கிறது. அதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கே.கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக இன்று  இன்று அதிகாலை தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் தூத்துக்குடி நகர காய்கறி சந்தையில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக காமராஜ்ர் மார்க்கெட் ள வியாபாரிகள் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள மீனவர் பகுதியில் வாக்கு சேகரித்ததுடன், அங்குள்ள மீனவர் வீட்டில் தேநீர் அருந்தினார். வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்று முதல்வர் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேனிநீர் அருந்தி சென்றார் தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்ததுடன், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது  வேட்பாளர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து,  தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்நலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

நாளை 26.03.2024 மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் சென்று நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக விருதுநகர் ராம்கோ கெஸ்ட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார்.
நாளை மறுநாள் 27.03.2024 மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக கிருஷ்ணன் கோயில் நிகழ்விடம் சென்று நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மதுரை விமான நிலையம் வந்து 8.00 மணிக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்து 9.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு இல்லம் வருகிறார்.
முதல்வர்  மு.க.ஸ்டாலின்,  நடைபயணம் காரணமாக, ராஜாஜி பூங்கா மற்றும் அருகே உள்ள மார்க்கெட் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.