சென்னை: பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம் என மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம், சாதி மத வேறுபாடுகளை களைய சீருடை திட்டம், கல்வியில் சிறந்த பள்ளி குழந்தைகள் மேலும் மேலும் படிக்க ஸ்காலர்ஷிப் திட்டம், முதியோர் பென்ஷன் என ஏராளமான நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்பட்டார். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
அவரது பிறந்த நாளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…