கைதிகள் போல சட்டமன்ற உறுப்பினர்கள்! சட்டமன்றத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Must read

சென்னை,

ன்று காலை 11 மணி அளவில் தமிழக சட்டசபை கூடியது. சபை கூடியதும் கடும் அமளி ஏற்பட்டது.

நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக தமிழக சட்டமன்றம் அமளியாக காணப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவு கொறடாவான செம்மலையை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  சிறை கைதிகள் போல அழைத்து வரப்பட்டதாகவும், கோட்டை வாசலில் இருந்து நடந்தே வந்ததாகவும் ஸ்டாலின் சட்டசபையில் குற்றம்சாட்டினார்.

இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தில்  மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அமளிகளுக்கு இடையே முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தமது அரசுக்கு  நம்பிக்கை வாக்கு கோரி பேசினார்.

இந்த சூழ்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் வாக்கெடுப்பு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article