சென்னை:

நம்பிக்கை வாக்கெடுப்புக் கேட்டு தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் அமளிக்கிடையே முன்மொழிந்தார்.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே சிறப்பு சட்டமன்றகூட்டம் தொடங்கியது. பெரும் அமளிக்கிடையே எடப்பாடி பழனிச்சாமி அரசு அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார். ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.  ரகசிய வாக்கெடுப்புக் கேட்டு பன்னீர் செல்வம் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட எதிர்க்கட்சி எம் எல்ஏக்கள்  வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும், எந்த வகையிலும் உறுப்பினர்களின் மரியாதைக்கும் மாண்புக்கும் பங்கம் வராது என்றும் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சபாநாயகர் உறுதி அளித்தார். தற்போது எதிர்க்கட்சி த்தலைவர் மு.. க ஸ்டாலின்  பேசிக் கொண்டிருக்கிறார். திமுக தலைவர் உடல் நிலை காரணமாக கலந்துகொள்ளவில்லை, முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததால் அவரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்குமாரும் போக சபாநாயகர் உட்பட 231 உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.