சென்னை:  அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தகவல்கள் பூதாகரமான நிலை யில், இதுகுறித்து தனது யுடியூப் பக்கத்தில் விமர்சனம் செய்த மூத்த  பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீது கருணாஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கூவத்தூர் விவகாரம் தொடர்பாகத் தன் மீது அவதூறு பரப்புவர்கள் மீதும்,  பயில்வான் ரங்கநாதன் மற்றும் யூடியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு,  முதலமைச்சர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சி செய்தார். இதன் காரணமாக, தற்போது தற்காலிக முதல்வராக இருந்த ஓபிஎஸ், சசிகலா இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் சிசகலாவுக்கு எதிராக, ஜெ.சமாதிக்கு சென்று மவுன விரம் இருந்து, அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதையடுத்து, சசிகலா தனது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களை சொகுசு பேருந்துகள் மூலம்  கூவத்தூர் தனியார் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கு சகல வசதிகள் வழங்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக சுமார்  7 ஆண்டுகளுக்கு பறிகு, தற்போது,  அதிமுகவில்இருந்து நீக்கப்பட்ட  முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் நடிகர்கள் கருணாஸ் மற்றும்திரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகளை சப்ளை செய்தது கருணாஸ்தான் என்றும் அவர் கூறியதற்கு கருணாஸ் மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையில்,  தன் மீது அவதூறு பரப்பியதற்காக ஏ.வி. ராஜூவுக்கு நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக பிரபல பத்திரிகையாளரும்  யுடியூபருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து, தன்மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் செய்திருந்தார்.

 இந்த நிலையில், இன்று மீண்டும் காவல் ஆணையர் அலுவலகம் வந்த கருணாஸ்,  யூடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில்,   ‘நடிகை த்ரிஷா மற்றும் இன்னும் சில நடிகைகளையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். என் மீது எந்த ஆதாரமுமின்றி பொய்யான தகவல் பரப்பி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூவத்தூரில் நடிகைகள்….? அதிமுக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ‘நடிகை திரிஷா’ கொந்தளிப்பு…