சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாட்டின் கூவத்தூர் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர், இந்த விவகாரம் மற்றும்,  இதில் நடிகைகளின் தொடர்பாக குறித்து பேசிய பேச்சு வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை திரிஷா அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டதாகவும், நடிகை திரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து கூட்டி வந்ததாகவும், அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூயின் பேச்சு தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக நிர்வாகி ராஜூவின் பேச்சு  அருவருப்பாக உள்ளது என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிஷா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராகவும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிளவுபட்டது. கடந்த 2016ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, சசிகலா முதல்வராக பதவியேற்க முற்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் ஓபிஎஸ், 11 எம்எல்ஏக்களுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற்றது. இதற்காக சசிகலா தரப்பு தனது ஆதரவு எம்எல்ஏக்களை  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கூவத்தூர் கோல்டன் பே ஸ்டார் ரிசார்ட்டில் தங்க வைத்து குடி, கும்மாளம், மது, மாது  என அனைத்து வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டனர். கூவத்தூரில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்பு விளக்கு ஏற்றி, சசிகலா முன்னிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் சத்தியம் செய்தார்கள் என கூறப்பட்டது. சுமார் 10 நாட்கள் அவர்கள் கூவத்தூரில் தங்கியிருந்து அழிச்சாட்டியம் செய்து வந்தனர். அந்த 10 நாட்களில் ரிசார்ட்டில் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது.. ரிசார்ட்டுக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தற்போது கூவத்தூர் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஏ.வி.ராஜூ. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியளார்கள்  முன்பு கூறிய சில சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூவத்தூர் விவகாரம் குறித்து அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்து திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது அதிமுக நிர்வாகியே கூவத்தூர் விவகாரம் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகைசகள் சப்ளை செய்யப்பட்டதாகவும், முக்கிய நபர் ஒருவருக்கு ரூ.25லட்சம் கொடுத்து நடிகையும் திரிஷாவை ஏற்பாடு செய்தாகவும், அவர் பேசியது   பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், நடிகை திரிஷா இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்ப திரும்பப் பார்ப்பது அருவருப்பானது. எனது தரப்பில் இருந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் திரிஷா குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பேச்சு தொடர்பாக அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜூவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்குவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கூவத்தூர் விவகாரத்தில், அதிமுக நிர்வாக  ஏ.வி. ராஜூ மட்டுமின்றி முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ், வெங்கடாச்சலம் ஆகியோர் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.