த்மாவதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது என்று நடிகையும்,  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே – குஷ்பு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில்  பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். வரலாற்ருப் படமான இதை வெளியிடக்கூடாது என்று ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இப்படத்துக்கு  தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி பத்மாவதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருவதால் படத்தை அறிவித்தபடி வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
ஜனநாயகத்தின் இருண்ட நாள் இது. பத்மாவதி, படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு தொடர்பாக மத்திய மற்றும் சில மாநில அரசுகளிடம் நிலவும் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. நமது ஜனநாயகத்தை கொலை செய்ய அனுமதி அளிக்கக் கூடாது. இப்படம் வெளியாகாமல் இருப்பது நமது சுதந்திரத்தையும், நமது அரசியலப்பு உரிமையை பாதுகாப்பதாக உறுதியளித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம்” என்று தனது ட்விட்டர் பதிவில் குஷ்பு தெரிவித்துள்ளார்.