பி.வாசு இயக்கி பிரபு நடித்த படம் ‘வேலை கிடைச்சுருச்சு’. இதில் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். பிறகு பல படங்கள். அதிலும்  ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் முக்கியமான வில்லன் என்ற இடத்தை அடைந்தார். இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

இப்போது இவரது மகன் அலிகான் துக்ளக், ‘கடம்மான் பாறை’ படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகிறார்.

மன்சூர் அலிகானே தயாரித்து இயக்குகிறார். அதோடு, விலங்கு மனிதனாகவும் நடித்திருக்கிறார்.

நாயகன் அலிகான் துக்ளக்கின் ஜோடியாக  அனு ராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி மன்சூரலிகான் பேசும்போது, “பெரிய வனத்துக்குள்ளே நடக்கும் திருவிழா; நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம். இதுதான் படத்தின் மையக் கதை..!

வனத்துக்குள் சிக்கிக்  கொள்ளும் சில இளைஞர்களும், சில இளம் பெண்களும் எதிர் கொள்ளும் ஆபத்துக்கள்தான்  படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதையும் ஆந்திர வனப்பகுதியில் நடத்தினோம். அவை எல்லாமே இதுவரை யாரும் படம் பிடிக்காத இடங்கள்” என்றார்.

# ‘கடம்மான் பாறை’ படத்தில் பங்குபெற்றுள்ள இதர கலைஞர்கள்:

ஒளிப்பதிவு – மகேஷ்.T, இசை – ரவிவர்மா, பாடல்கள்- சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான், கலை – ஜெயகுமார், நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ், சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்.