பெங்களூரூ:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, இந்த பேனிக் பட்டன்கள் மூலமாக பேருந்து எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறது, பேருந்து நிலையத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என அனைத்து வகையான தகவல்களையும் கண்காணிக்கும் படியான புது அமைப்பு செயல்படுத்தப்பட இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து கர்நாடக அரசு பேருந்துகளிலும் பேனிக் பட்டன்களை பொருத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முயற்சிக்காக கர்நாடக அரசு ரூ. 30.74 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசின் இந்த புதிய திட்டத்தின் மூலமாக பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைவதோடு மட்டுமல்லாமல் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து பேருந்துகளின் வழித்தடங்களும் பிரத்தியேக கட்டுப்பாட்டு அறையின் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.