கோவை காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார். என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் மாலை வேளையில் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

பொது தகவல்:

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிவன் சன்னதியைப் போலவே, இங்கும் 8 யானைகள் சுவாமி விமானத்தைத் தாங்கியபடி அமைந்துள்ளது.

இதில் ஒரு யானையின் கீழ் பிரம்மனும், மற்றொரு யானைக்கு கீழ் லட்சுமி நாராயணரும் காட்சி தருகின்றனர். அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார். என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் மாலை வேளையில் இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

சன்னதிகள்

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் தவிர, அம்பாள் லோகநாயகி, விநாயகர், ஆறுமுக வேலவர், சண்டிகேசுவரர், காலபைரவர் ஆகியோருக்கு இங்கு சன்னதிகள் உள்ளன.

வழிபாடு :

திருமணம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்தில் சிவ துர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட்டு சென்றால் நினைத்தது நடக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பழமையான இந்திய கோயில்களை தரிசனம் செய்து அருள் பெறுவோம்

ஒவ்வொரு மாதமும் சிறப்பு அபிஷேகம் :

இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நஞ்சுண்டே ஸ்வரருக்கு தேனபிஷேகமும், வைகாசி மாதத்தில் கரும்புச் சாறு அபிஷேகமும், ஆனி மாதத்தில் தீர்த்தவாரியும், ஆவணி மாதத்தில் நெய்யபிஷேகமும், புரட்டாசி மாதத்தில் பால் தயிர் அபிஷேகமும் செய்து வேண்டி கொள்ள சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்ந்திடலாம் என்பது ஐதீகம்!

கர்நாடகாவில் ஒரு நஞ்சுண்டேஸ்வரர் கோயில் :

கர்நாடகாவில் நஞ்சன்கூடில் என்ற பிரசித்தி பெற்ற ஆலயம் உள்ளது. அதே பெயரில் தமிழகத்திலும் கோவை, காரமடையில் அமைந்துள்ளது சிறப்பு.

ஒரு காலத்தில் சில காரணங்களுக்காக நஞ்சன்கூடில் வாழ்ந்தவர்கள் சிலர் தமிழகத்திற்கு குடி பெயர்ந்தனர். அவர்கள் காரைமடையில் நஞ்சன்கூடில் உள்ள கோயில் போல அமைத்தனர். இந்த ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முன் வீரநஞ்சராயர் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த ஊரில் இறந்தால் மட்டும் மறுபிறப்பே கிடையாதாம்… சிவனே காதில் வந்து நமசிவாய சொல்லி முக்தி தருகிறாராம்.

கோயிலில் உள்ள அதிசயம் வித்தியாசமான சிவலிங்கம் :

மற்ற சிவாலயங்களில் இருப்பது போல இல்லாமல் சிவலிங்கம் சற்று தட்டையாகவும், கருமையாக இல்லாமல் செந்நிறமாகவும் காட்சி அளிப்பது விசேஷமானது.

மூலவரைப் போலவே சுற்று பிரகாரத்தில் மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பு தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கோயிலில் இரண்டு ஆவுடையார் காட்சி தருவதைக் காண்பது அரிது.