சென்னை:

டந்த 2018ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கூறி சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர்  02 ந்தேதி தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈபிஎஸ், ஓபிஎஸ்ஐ விமர்சித்தும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான சிறையில் உள்ள   7 பேர் விடுதலை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாடு, எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவை குறித்து பேசியவர், மத்தியஅரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுப்பதாக கூறுவது, எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்; இது ஒரு வேடிக்கை விளையாட்டு இதைதான் நாம ரசிச்சிகிட்டு இருக்கோம் என்றார்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், சீமான் மீது,  வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக ,  இந்திய தண்டனைச்சட்டம் 153, 505 (1)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.