துரை

ங்கில மர்மப்படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு உள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட நாடு எஸ்டேட்டில் அவர் மறைவுக்குப் பிறகு காவலர் ஒருவர் மர்மமாக கொல்லப்பட்டார்.   அங்குள்ள சில ஆவணங்களைக் கொள்ளையடிக்க சிலர் முயன்றபோது அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.  அது குரித்த விசாரணையில் ஒன்றன்பின் ஒன்றாக ப;ல விவரங்கள் வெளி வருகின்றன.  இதில் அதிமுக நிர்வாகிகள் பலருக்குத் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.   சரியான விவரம் இன்னும் புலப்படாமல் உள்ளது.

சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பர்ம் இது குறித்து,

“ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்குக் கோடநாடு வழக்கு  உள்ளது.. அங்கே சொத்து வாங்கியது, பின்னர் பங்குதாரரைப் பிரித்தது வரை, ஜெயலலிதா மரணம் முதல் கொலை, கொள்ளை வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது.

கோடநாடு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதில் உள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும். தவிரக் கோடநாடு வழக்கை  அதிமுக ஏன் எதிர்க்கிறது எனப் புரியவில்லை.”

எனத் தெரிவித்துள்ளார்.