சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இதனால், கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேக்கு சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவிக்கு வந்தது பேருந்து நிலையத்தின் பெயரை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என வைத்ததுடன், கருணாநிதி சிலையையும் உள்ளே வைத்து அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல முறையான வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டு, பேருந்து களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்குவது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்த அவலங்களும் அரங்கேறி உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதிகள் செய்யாத திமுக அரசும், சிஎம்டிஏ அதிகாரிகளும், எப்படி செல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தங்களுடன் லக்கேஜ்களும் எடுத்து செல்லும் நிலையில், அரசு கூறுவது போல, எத்தனை பேருந்துகள் மாறி செல்ல முடியும் என்றும், சென்னையில் இருந்து வேலூர் செல்லவே 3மணி நேரம்தான் ஆகும். ஆனால், சென்னையில் இருந்து கிளம்பாக்கம் செல்ல 3மணி நேரத்திற்கு மேலாகிறது என்று குற்றம் சாட்டும் பயணிகள், கிளாம்பாக்கம் சென்றால், அங்கு எந்த பேருந்துகள் எங்கே நிற்கிறது என்ற விவரமும் இல்லை என்றும், பேருந்து நிலையத்திற்குள் போதிய வசதிகளை செய்யாமல், பயணிகள் பேருந்துகள் எங்கு உள்ளது என்று கண்டறிய சிரமப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
திமுக அரசு எதற்காக அவசர கதியில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்தது என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல சுமார் 3மணி நேரம் வரை ஆவதுடன், அதற்காக மேலும் ரூ.100 வரை செலவிடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவசர செல்ல வேண்டுமானால், கால் டாக்சியோ, ஆட்டோவோ பிடிக்க முயன்றதால், அதன் கட்டணம் ரூ.1000ஐ தாண்டி வருகிறது என்று கூறும் பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வாயிற்பகுதியை பொத்தேரி பகுதியில் வைத்துள்ளற்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல, கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர். நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய குறைகள் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும்! அமைச்சர் சேகர்பாபு…
தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும், அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் நிலையில் அந்த பகுதியில் பேருந்துகளை இயக்க போதிய சாலை வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல்
அந்த பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்தஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைப்பதில் அவசரம் காட்டும் திமுக அரசு பணிகளை உரிய முறையில் முடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள அரசியல் கட்சிடியினர், கிளாம்பாக்கம் பேருந்துநிலைய பிரச்சனைகள் வரும் பொங்கலுக்குள் சரி செய்யப்படும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். வசதிகளை ஏற்படுத்தி விட்டு பேருந்துநிலையத்தை திறந்திருக்கலாமே என எதிர்க்கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநகரப் பேருந்து நிலையம் இருக்குமிடத்திலிருந்து, பேருந்து முனையம் செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பயணி ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தும் பகுதியில் குறைவான இருக்கைகளே உள்ளன. மாநகர பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில் ஒரு இருக்கை வசதி கூட இல்லை. புறநகர், வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு செல்லவும், அங்கிருந்து மாநகர பேருந்து நிறுத்தும் இடத்துக்கு வருவதற்கும் நேரடி வசதி இல்லாத அவலத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டு இருப்பது திமுகவுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.
அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் ₹20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் தொடங்கி முடிவடைய சுமார் ஒரு வருட காலத்திற்கு மேல் ஆகும் என்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசின் சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து கூறிய சிஎம்டிஏ அதிகாரிகள், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு 4 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்து உள்ளனர். மேலும், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.20 கோடியை தெற்கு ரயில்வேக்கு சிஎம்டிஏ வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மாநில நிதியில் அமைக்கப்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவிக்கு வந்தது. 2021-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த 10 சதவீத பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.
பணிகள் முழுமையாக முடிக்காமல் மக்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை திட்டமிடாமல் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன், மற்றவர்கள் செய்த பணிகளை ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் பணிகளாக காட்டுவதில் முனைப்பு காட்டும் திராவிட மாடல் திமுக அரசு இந்த பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டு அவசர கதியில் திறந்து வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்க கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையல், பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறப்பது கடினம் என சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு 2023 டிசம்பர் மாதம் 15ந்தேதி கூறிய நிலையில், ஜனவரியில் அவசரம் அவசரமாக திறக்கப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர். நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
எந்த நோக்கத்திற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், அங்கு மீண்டும் வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, 6மணி பேருந்துக்கு முன்பதிவு செய்திருந்தால், 2மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம்! அமைச்சர் சேகர்பாபு…
இன்று திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் புதியபேருந்து நிலையம் – வசதிகள் என்னென்ன?