சென்னை: தென்மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிக்க கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையல், பொங்கல் பண்டிகைக்கு முன்பு  திறப்பது கடினம் என சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். மேலும்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால், பணிகள் தாமதமாகி வருவதாகவும் கூறினார்.

வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் இன்று நேரில் சென்று  ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எஞ்சியுள்ள பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை  ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. ‘பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தால் நெரிசல் குறையும். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம், ஆனால், பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.