திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில், சிக்கிய ஸ்வப்னா சுரேஷ், தனக்கு ரூ..30 கோடி கொடுத்து நாட்டை விட்டு வெளியேற கேரள முதல்வர் பினராயி விஜயன் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என  தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  நிலையில், நேற்று (மார்ச் 09ந்தேதி / 2020 / https://www.facebook.com/krishnakumarswapna) ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை லைவாக வெளியிட்டார். அதில், பல குற்றச்சாட்டுக்களை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்மீது சுமத்தி உள்ளார். அந்த வீடியோவில்ல், நாட்டை விட்டு வெளியேறி வேறி, வேறு எங்காவது குடியேறு கூறி, தனக்கு அவர் ரூ.30 கோடி கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாளத்தில் பேசியுள்ள ஸ்வப்னாவின் வீடியோவில்,   தான், கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பற்றி பேசுவதை நிறுத்தாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிபிஎம் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். கேரள முதலமைச்சருக்கு எதிராக தன்னிடம் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்றும், கோவிந்தன் மாஸ்டர் எனது வாழ்க்கையை “முடித்து” விடுவதாக மிரட்டியுள்ளார் என்றும், 2 நாட்களுக்குள் முடிவு எடுக்க அவகாசம் கொடுத்தார் என்றும் ஸ்வப்னா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும்,  ‘‘சிவசங்கரின் (கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர்) உண்மை நிறத்தை அறிந்த பிறகு உண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.

பின்னர், விஜய் பிள்ளை என்ற நபரிடம் இருந்து எனக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் அவர் சமரசப் பேச்சு நடந்தினார். நான் பெங்களூரை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் எனக்கு மிரட்டல் விடுத்தார்.

நான், பினராயி விஜயன், அவரது மகள் மற்றும் தொழிலதிபர் யூசப் அலி பற்றி பேசுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எனக்கு 30 கோடி ரூபாய் வழங்கி, நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு குடிபெயருமாறு மிரட்டினார்கள்,’’ என்று தனது ஃபேஸ்புக் நேரலையில் ஸ்வப்னா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள முதல்வர் சார்பாக, ‘விஜய் பிள்ளை என்னை மிரட்டி, நாட்டை விட்டு வெளியேற சொல்கிறார். முதல்வர் பினராயி விஜயனுடனோ அல்லது அவரது குடும்பத்தினருடனோ எனக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால், சரியான முடிவை நான் எடுக்காவிட்டால் சிபிஎம் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் என் வாழ்க்கையை முடித்துவிடுவார் என்று எனக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டது.

நான் முடிவை எடுக்க அவர் எனக்கு 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அவருடைய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை எனது வழக்கறிஞருக்கு அனுப்பியுள்ளேன்,” என்றும் ஸ்வப்னா அந்தவீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.

‘‘இந்த மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன், கண்டிப்பாக நான் இதை எதிர்த்து போராடுவேன், “கடைசி வரை போராடப் போகிறேன், என் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த வீடியோவில் பினராய் விஜயனை எச்சரித்துள்ளார்.

நான் உயிருடன் இருந்தால், உங்கள் மொத்த வணிக சாம்ராஜ்யத்தையும் அம்பலப்படுத்துவேன், என்னை மிரட்டி முடக்க நினைக்க வேண்டாம். உங்கள் உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்துவேன்,”

“நான் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை, கடைசி மூச்சு வரை போராடப் போகிறேன், கோவிந்தன் மாஸ்டர் என் வாழ்க்கையை முடித்துவிடுவார் என்று அவர் (விஜய் பிள்ளை) தெளிவாகச் சொன்னார்.

அந்த நபரின் புகைப்படங்கள் போன்ற முழு விவரங்களையும் நான் ஊடகங்களுக்குத் தருகிறேன். நான் பெங்களூரை விட்டு ஓடப் போவதில்லை. இங்கேயே இருக்கிறேன். தயவு செய்து என் உயிருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று ஸ்வப்னா மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், பினராயி விஜயன் தனது மகள் வீணா விஜயனுக்காகவும், தனது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவும் வளர்ச்சி என்ற போர்வையில் மாநிலத்தில் திட்டங்களை உருவாக்கி வருவதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சாட்டினார்.

“முதலமைச்சரின் திட்டங்கள் தேவையற்ற கமிஷன்களை உருவாக்கி, தனது மகளுக்காகவோ அல்லது அவரது குடும்பத்திற்காகவோ அல்லது அவரது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவோ ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருவதாகவும் அந்த வீடியோவில் ஸ்வப்னா குற்றம் சாட்டி உள்ளார்.

ஸ்வப்னாவில் இந்த வீடியோ கேரளாவில் வைரலாகி வருகிறது.

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு