டெல்லி: கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருங்கள் என மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி நேற்று ஒரே நாளல் ,7,240பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது. அதே வேளையில் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 1,947,642,992 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,31,510 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார்த்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும்.  இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.