3
சென்னை:
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சைக்கு பின் இன்று மாலை வீடு திரும்பினார்.
ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கருணாநிதி டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஒரு வார காலமாக மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று மாலை அவர் வீடு திரும்பினார்.