சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அதற்கு முன்பு 4ம் தேதி மாலையே, முதல்வர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி பரவியது.  இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்குமோ என பொதுமக்கள் பதட்டப்பட ஆரம்பித்தனர்.

அன்பு
அன்பு

விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்த காவல்துறையினர், தகுந்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்வதில் மும்முரமாயினர்.
சென்னை காவல்துறை சரகத்திலும், பணஇ முடித்துதிரும்பிய காவலர்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.
இதனால் 4ம் தேதி மாலை துவங்கி மறுநாள் 5ம் தேதி முழுதும் ,மற்றும் முதல்வர் உடல் அடக்கம் செய்யப்படும் 6 ஆம் தேதி முழுதும் காவலர்கள் தொடர்ந்து பணி புரிந்தனர். அதாவது தொடர்ந்து 48 மணி நேரம்..
உணவு மட்டுமின்றி  குடிக்க தண்ணீர்  இன்றியும் மட்டுமல்ல.  இயற்கை உபாதைகளுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை. பெண் காவலர்களின் நிலை இன்னும் மோசம்.
அஞ்சலி
அஞ்சலி

இந்த நிலையில், பரங்கிமலை போக்குவரத்து அமலாக்கப்பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்த அன்பு மிகவும் சோர்வடைந்தார். ஆனாலும் பணியில் தொடர்ந்தார்.
முதல்வர் மரணத்தை அறிவிக்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் கிண்டி எம்.கே.என் சாலையில் பணியில் இருந்த அன்பு, திடீரென மயங்கிவிழுந்தார்.
உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த காவலர் அன்பு உடலுக்கு போக்குவரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி , துணை ஆணையர் தெற்கு அரவிந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மிகச் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, அசம்பாவித சம்பவங்கள் நடக்கமல் பணியில் ஈடுபட்டது தமிழக காவல்துறை.
அவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, மறைந்த காவலர் அன்பு அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.