இன்று (ஜூன் 27) வெளியிடப்படுவதாக இருந்த ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு, நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

சூர்யாவின் 37-வது படமான இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, தெலுங்கில் இந்தப் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த இன்று நடிகையும் இயக்குநருமான விஜய நிர்மலா காலமானதால், அறிவிப்பு நாளை (ஜூன் 28) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கே.வி.ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.