“மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் பல்வேறு கெட் அப்புகளில் கமல்..

நெட்டிசன்:

 vivekanandan Ramadoss அவர்களது முகநூல் பதிவில் இருந்து..

 

“கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்கிறார்.

முழுக்க முழுக்க மாநில அரசைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் யார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிறார்களோ, அவர்களுக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்று காட்டமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் இடையில் கேட்கிறார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டியது மத்திய அரசு, ஆனால் நீங்கள் மாநில அரசை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது என கேட்கிறார்.

உடனே கமலஹாசன் பம்மிக் கொண்டு, மோடி அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் சொல்ல முடியாது. அவர் நமது மதிப்பிற்குரிய பிரதமர்(Note the word: Honorable Prime Minister). நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தான் நான் கேட்க முடியும் என்று முடிக்கிறார்.

மத்திய அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன என்று மீண்டும் கேட்கிறார் பத்திரிக்கையாளர். அவ்வளவு நேரம் மாநில அரசைப் பற்றி காட்டமாக பேசிக் கொண்டிருந்த கமலஹாசன் தனது குரல் டோனை இறக்கி, ”Please Sir, உங்களுக்கு காவிரி மேலாண்மை “திட்டத்தை” அமைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. நீங்கள் அதை அமைக்க வேண்டும்” என்று முடிக்கிறார்.

மீண்டும் மாநில அரசைப் பற்றி பேசும் போது விருமாண்டி கமலாக மீசையை முறுக்கிக் கொண்டு வாய்ஸ் டோனை ஏற்றுகிறார். இதனால் தான் சொல்கிறோம் கமலஹாசன் என்கிற நபர் ரஜினிகாந்தை விட மிகப் பெரிய அயோக்கியன் என்று. பாஜகவின் Sleeper cell தான் இந்த கமலஹாசன். ரஜினிகாந்தைக் காட்டிலும் முதலில் அம்பலப்படுத்தப்பட வேண்டியது இந்த அயோக்கியன் தான்.

நினைத்தபோதெல்லாம் மோடியை நேரில் சந்திக்கும் வாய்பு பெற்றிருக்கும் இந்த நபர்,
மோடியின் அடிமை எடப்பாடியை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறாராம்.

இதுல ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வேற போராறாம்.”