சென்னை:

அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம் ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் 2-ம் தேதிக்கு பதிலாக 3-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.