சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை வலியுறுத்தி வரும் 2ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னதாக வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார்.