சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில்,  திங்கள்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) தமிழகம் முழுவதும் அதிமுக சாரிபில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

மேலும், கர்நாடக தேர்தலை மனதில்கொண்டு,  கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லித் தான் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதி மன்றத்தில் விளக்கம் கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.