சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க திமுக செயற்குழு இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

இந்த செயற்குழு கூட்டத்தில்  அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானம் விவரம்:

1. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்.

2. அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்ததப்படும்.

3. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.

4. நேர்மையற்ற முறையில் நடக்காத கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

5. நியூட்ரினோ திட்டஅனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

6. ஏப்ரல் 2ம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.

7. மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம்

இவ்வாறு 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.