இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதுக்கான பட்டியலில் சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்துள்ள மெர்சல் தேர்வாகியுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்தில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டுக்கான படப்பட்டியலில் மெர்சல் சேர்ந்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் மெர்சல் படம் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் 4-வது இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வாகி உள்ளது.

இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த பட்டியலில் இருந்து 8 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,  சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டு உள்ளது.