சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் ஆணையை நிறைவேற்றாத நிலையில், வரும் 15ந்தேதி தமிழகம் வரும் பிரதருக்கு திமுக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டா லின் கூறி உள்ளார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்தாக மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறிய ஸ்டாலின், வருகிற 1ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும், இந்த கூட்டத்தில், தி.மு.க.வுடன் ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறினார்.

அவர்களுடன்  ஒன்று கூட்டி ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  முடிவு எடுக்கப்படும் என்றார்.

மேலும், வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க.வின் உண்ணாவிரதம் பற்றிய அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்திவிட்டு இப்போது போராட்டம் என்கிறார்கள். இதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.