டில்லி

ஜினியின் அரசியலில் உள்ள காவி நிறம் மாறினால் மட்டுமே நான் அவருடன் கூட்டணி அமைப்பேன் என கமலஹாசன் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டின் பிரபல நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.    இருவரும் அரசியலில் இணைவார்களா அல்லது தனித்தனியே இயங்குவார்களா என்பது  இன்றுவரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

சமீபத்தில் கமலஹாசன் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசி உள்ளார்.  அப்போது அவர், “தேவைப்பட்டால் நானும் ரஜினிகாந்தும் அரசியலில் இணைந்து தேர்தலை எதிர் கொள்வோம்.    ரஜினிகாந்த் இது குறித்து கேட்ட போது காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என கூறி உள்ளார்.   நானும் அதையே ஒரு தமிழ் வார இதழிலும் தெரிவித்துள்ளேன்.     ரஜினிகாந்தின் அரசியலில் காவி நிறம் உள்ளது.   அது மாறினால் மட்டுமே நான் கூட்டணி வைப்பேன்”  என கூறி உள்ளார்.