ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம்.

ஜூன் 3 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் விளம்பரம் புதிய தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ரயில் பெட்டிகளின் வெளியில் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில், விக்ரம் படத்தின் விளம்பரம் மூலம். டிக்கெட் இல்லாமல் மாற்று வழியில் வருமானம் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை திரையிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியிருக்கிறது.