விழுப்புரம்: தங்களது மகளின் உடற்கூறாய்வு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ குழு சமர்ப்பித்தள்ள ஆய்வறிக்கை எங்களுக்கும்  வேண்டும் என கள்ளக்குறிச்சி மாணவி  ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, பள்ளி மாடியில் இருந்துவிழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர்,  ஜூலை 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  ஆனால், அதை மாணவியின் பெற்றோர் ஏற்க மறுத்த நிலையில்,  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மாணவியின் உடன் மீண்டும்  மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதை ஏற்க மாணவியின் பெற்றோர் மறுத்து விட்டனர். இதையடுத்து,   மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த்தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழு உடற்கூறாய்வு அறிக்கையை ஆய்வு செய்து, நேற்று (22-08-22) அதன் அறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, இன்று ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில்  ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் மனு  தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு….