மம்மூட்டி-யின் அடுத்த படத்தில் ஜோதிகா…

Must read

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி-யின் அடுத்த படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தை இயக்கிய ஜோ பேபி இயக்க உள்ளார்.

கடந்த ஆண்டு ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஜோ பேபியின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் மம்மூட்டியை இயக்கப்போவதாக பேசப்படுகிறது.

மம்மூட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் இதுவே இவர்கள் இருவரும் முதல்முறையாக இனைந்து நடிக்கும் படம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article