நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா தொற்று உறுதி….!

Must read

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

”கோவிட் 19-க்கு நேர்மறையாக சோதித்தேன். தயவுசெய்து யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும் நானும் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்களின் மேற்பார்வையில் அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்களை சோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

More articles

Latest article