ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதிக்கு மே 20 வரை காத்திருங்கள்…..!

Must read

‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.

கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், ஜூனியர் என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர்.

அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ஆலியா பட்டின் சீதா கதாபாத்திர போஸ்டரை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.

அஜய் தேவ்கனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில் படத்தில் நடித்த ராம் சரண், ஆச்சார்யா படப்பிடிப்பில் பிஸியானதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. கொரோனா இரண்டாம் அலையில் படப்பிடிப்பு மேலும் முடக்கப்பட்டது. இதனால், படவெளியீட்டை 2022 ஆம் ஆண்டு கோடைக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.

மே 20 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோ ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாள். அன்று படவெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றனர்.

 

More articles

Latest article