சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படம் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது.

முதன் முறையாக 100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு சிறந்த சண்டை காட்சி மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்டிற்கான தேசிய விருது கிடைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து பேட்டியளித்த யாஷ் இது வெறும் வதந்தி தான் கே.ஜி.எப் 2 நிச்சயம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என்று கூறியிருந்தார் .

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஜுலை 16 படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். கொரோனா இரண்டாம் அலையின் உக்கிரம் ஜுலையிலும் தொடர வாய்ப்புள்ளதால், பட வெளியீட்டு தேதியை தசராவுக்கு மாற்ற தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது. தசராவை முன்னிட்டு அக்டோபர் 15 படத்தை வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.