மும்பை:

ஜியோவின் ‘சம்மர் ஆஃபர்’ திட்டத்துக்கு டிராய் பல தடைகளை விதித்தது. அதனால் தனது தொழில் யுக்தியை பயன்படுத்தி புதிய வடிவில் சலுகை திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

இணைய சேவை, அழைப்புகள், எஸ்எம்எஸ், ரேட் கட்டர் உள்பட பல வழிகளில் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் பணத்தை செல்போன் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன.

இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் அழைப்பு, எஸ்எம்எஸ் என அனைத்தும் இலவசம், இணையதள சேவையும் நாள்தோறு ஒரு ஜிபி வரை இலவசம் என அதிரடி அறிவிப்புகளுடன் களம் இறங்கிய ஜியோ தற்போது வேகமாக வளர்ந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

இலவச சேவையில் இணைந்த 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கட்டண சேவைக்கு ஜியோ மாற்றியுள்ளது. அடுத்த அதிரடியாக, ‘தன் தனா தன்’ என்ற புதிய ஆஃபர் திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம்,மூலம் ரூ.309 மற்றும் ரூ.509-க்கு வழங்கப்படுகிறது.

மேலும், புதிதாக சேருவோருக்க ரூ.408 மற்றும் ரூ.608-க்கு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.309-ல் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் 3 மாதங்களுக்கும், ரூ.509-ல் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் வழங்கப்படும்.

மேலும், 3 மாதங்களுக்கு ஜியோவின் இலவச போன் கால்கள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் என அத்தனை சேவைகளும் இந்தத் திட்டத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதிக்குள், வாடிக்கையாளர்கள் இணைவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.