சென்னை: ஐஐடி யில் மாணாக்கர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு மே மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலுமுள்ள ஐஐடி களில் சேர வேண்டுமெனில், ஜேஇஇ எனப்படும் இரண்டுகட்ட தேர்வுகளை எழுதுவது கட்டாயம். ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள்தான் அவை.

ஜேஇஇ முதற்கட்ட மெயின் தேர்வு இம்மாதமே நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட மெயின் தேர்வு ஏப்ரலில் நடைபெறவுள்ளது. அதேசமயம், இந்த இரண்டு தேர்வுகளில் ஒரு மாணாக்கர் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டாலே போதுமானது.

அந்த மதிப்பெண் அடிப்படையில் அவர் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொள்ளலாம். இந்தாண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை டெல்லி ஐஐடி நடத்துகிறது.

இத்தேர்வுக்கு ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டுமெனவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.